திக்குவாயின் வகைகள் என்ன?

வணக்கம் உறவுகளே நான் சந்துரு,

திக்குவாயில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பதை இப்போது காணப்போகிறோம்.

திக்குவாய் முதல்நிலை

திக்குவாயின் முதல் வகை என்பது தான் திக்குவது தனக்கு மட்டுமே தெரியும் மற்றவருக்கு அதை காட்டிக் கொள்ளாமல் அவர் எளிமையாக மறைக்க இயலும் மிகக் குறைவான அளவே அவருக்கு திக்குவாய் இருக்கும் அவரால் 80 சதவீதத்துக்கு மேல் எளிமையாக சீராக பேச இயலும்,

திக்குவாய் இரண்டாம் நிலை

திக்குவாயின் இரண்டாவது வகையில் உள்ள மக்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தன் திக்குவாய் பேச்சு வெளியில் வருவதை உணர்வார்கள் அவர்களால் அந்த நேரங்களில் அந்த திக்குவாயை கட்டுப்படுத்த முடியாது வெளிப்படுத்தக்கூடிய கட்டாயமாக அந்த சூழல் ஏற்படும், ஆனால் நெருங்கிய உறவுகள், தனியாக இருக்கும் பொழுது பல இடங்களில் அவர்களால் மற்றொரு 80 சதவீதத்திற்கும் மேல் சீராக பேச இயலும்.

திக்குவாய் மூன்றாம் நிலை

மூன்றாம் வகை திக்குவாய் உடைய மக்கள் எல்லா இடங்களிலும் பொதுவாக ஆரம்பம் செய்யும் இடங்களிலும் திக்குவாய் அதிகமாக இருக்கக்கூடிய தன்மையை வைத்திருப்பார்கள், அவருடைய மனதில் எப்பொழுதுமே சரியாக பேசுவோமா எனக்கு பேச்சு வராது என்ற பயம் கலந்த உணர்வு இருக்கும், மனதில் ஒரு அழுத்தம் எப்பொழுதுமே அவரிடம் இருக்கும், அவரால் பதட்டமான சூழ்நிலையிலும் பயந்த இடங்களிலும் முழுமையாக தன் கட்டுப்பாட்டை இழந்து இருப்பார், வார்த்தைகள் வெளி வருவது மிகவும் கடினம்.

திக்குவாய் நான்காம் நிலை.

இந்த வகை திக்குவாய் உடைய மக்கள் தான் தனியாக இருக்கும் பொழுது கூட வார்த்தைகள் தடுமாறுவதை அதிகமாக உணர முடியும் வெளியில் சென்று அவர்களால் பொது வெளியில் சுதந்திரமாக எந்தவிதமான வார்த்தைகளையும் பேச முடியாத கஷ்டம் மனதில் எப்பொழுதுமே இருக்கும், இவர்களுக்கு மனதளவில் ஆற்றல் குறைவாக இருப்பதை அவர்கள் உணர்ந்து கொண்டே இருப்பார்கள், வார்த்தைகளை இழுத்து இழுத்து உதடுகளை இழுத்தபடி பேசக்கூடிய தன்மை அவர்களிடம் வெளிப்படும்.

திக்குவாயை போக்க மூன்று ரகசியங்கள்

திக்குவாய் பற்றிய ஆழமான ரகசியங்களை எளிதாக புரிந்து கொள்ளுங்கள், இலவச பயிற்சிக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே!!!

Min
Sec

இலவச பயிற்சிகள் இன்றோடு முடிவடைகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *